சிறிலங்கா பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு?
சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில் அரசியல் மட்டத்தில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_341.html

சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில் அரசியல் மட்டத்தில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 26 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன், அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நேற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளை பெற்றுள்ள தருணத்தில், எதிர்கட்சியொன்றின் நிலைப்பாடு தொடர்பாக அரசியல் தரப்பினர் மத்தியில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சில அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படவுள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதனடிப்படையில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வரகூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக செயற்படுவார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate