குளிரூட்டிக்குள் குழந்தைகள் - அதிர்ச்சியூட்டும் கொடூரம்!!! (காணொளி)
Gironde மாவட்டத்தின் Louchats எனும் விசாயக் கிராமம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. அதி குளிரூட்டிப்பெட்டிக்குள் (congélateur)...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_718.html

Gironde மாவட்டத்தின் Louchats எனும் விசாயக் கிராமம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. அதி குளிரூட்டிப்பெட்டிக்குள் (congélateur) நான்கு குழந்தைகளும், குளிர்காப்புப் பைக்குள், ஓரிரு நாட்கள் முன் பிறந்த குழந்தையின் உடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு «கர்ப்ப மறுப்பு», குழந்தைகள் படுகொலையில் சென்று முடிந்துள்ளதாகவே இந்தக் கொடூரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது வீட்டினுள் ஒரு குழந்தையின் உடலம், ஓர் குளிர்காப்புப் பையினுள் (sac isotherme) இருந்ததைக் கண்ட குடும்பத்தலைவர் உடனடியாக ஜோந்தாமினர்க்குத் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த ஜோந்தாமினர் தொடர்ந்து நடாத்திய தேடுதலில் அங்கிருந்த ஒரு அதிகுளிரூட்டிப் பெட்டிக்குள் இருந்து, உறைந்த நிலையிலிருந்த மேலும் நான்கு குழந்தைகளின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் பிரான்சில் நடந்த குழந்தைகள் படுகொலையில் இதுவே அதிகமானதாகும்.
முதற்கட்டத் தகவல்களின் படி, இந்தக் குழந்தைகளின் தாய் எனக்கருதப்படும், தகவல் கொடுத்தவரின் 35 வயது மனைவி, வீட்டிலேயே தனித்து இந்தக் குழந்தைகளைப் பெற்றுவிட்டு அவரே அவற்றைக் கொன்றுள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் உடனடியாக Pellegrin அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழந்தைகளை இவர் தான் பெற்றுள்ளாரா என்பதைக் கண்டறியவும், இவரிற்கு மனநோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து விசாரிக்கும் நிலையில், மனநிலையும் உடல் நிலையும் இல்லை என இந்த விசாரணையைப் பொறுப்பேற்ற ஜோந்தாமினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குளிரூட்டிக்குள் இருந்த பிள்ளைகளின் மரபணுவும் இந்தப் பெண்மணியின் மரபணுவும் ஒத்துப் போகின்றதா என்ற சோதனையே விசாரணைகளிற்கு அடிப்படையாக இருக்கும். கொல்லப்பட்ட குழந்தைகள் சகோதரர்களா என்பதையும் இந்த மரபணுப் பரிசோதனைகளே முடிவு செய்யும். இந்தத் தரவுகள் தெளிவுபடுத்தப் படாமல் எந்தவிதமான பூர்வாங்க விசாரணைகளையும் ஆரம்பிக்க முடியாது. அத்தோடு இன்னமும் ஒன்றிரண்டு நாட்களின் இவர்களின் வீட்டின் காணியும், வேறெதுவும் குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளனவா என்பதற்காகச் சோதனையிடப்பட உள்ளது என ஜோந்தார்மினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கடைசியாக குளிர்காப்புப் பையினுள் இருந்த குழந்தை, பிறந்து கொல்லப்பட்டதா? அல்லது இறந்தே பிறந்ததா? என்பதுவும் உடலப் பரிசோதனைகளின் பின்னரே அறியப்படும். இந்த இருட்டுக்கள் நீக்கப்பட்டால் மட்டுமே விசாரணைகளில் தீர்வு பிறக்கும்.
இந்தத் தம்பதிகளிற்கு 13 மற்றும் 15 வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடமும் காவற்துறையினரால் வாக்குமூலங்கள் பெற்றப்பட உள்ளன.

போர்தோவின் தென்திசையில், கிட்டத்தட்ட 50 கிலோமீற்றர் தூரத்திலுள்ள, 700 பேர் மட்டுமே வசிக்கும் இந்த விவசாயக் கிராமமம் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை.
இவர்கள் பொருளாதார நிலையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள். பல வருடங்களாக இந்தக் கிராமத்தில் வசித்து வருபவர்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் எதனையும் ஊடகங்களிற்கு வழங்க நகரபிதா மறுத்துள்ளார். நகரசபையும் பூட்டியபடியே உள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate