அமெரிக்க ராணுவத்தால் கொலம்பியாவில் 54 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
கொலம்பியாவில் அமெரிக்க படைகளாலும் ராணுவ ஒப்பந்ததாரர்களாலும் கடந்த 2003 முதல் 2007 ஆம் ஆண்டு வரை 54 கொலம்பிய பெண்கள் பாலியல் பல...
http://kandyskynews.blogspot.com/2015/03/54.html
 |
கொலம்பியாவில் அமெரிக்க படைகளாலும் ராணுவ ஒப்பந்ததாரர்களாலும் கடந்த 2003 முதல் 2007 ஆம் ஆண்டு வரை 54 கொலம்பிய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளனர் என் அந்நாட்டின் நல்லிணக்க விசாரணைக்குழு தெரிவித்து உள்ளது.
கொலம்பிய அரசு மற்றும் கொலம்பிய புரட்சிகர ஆயுத படைகள் மூலம் அமைக்கப்பட்ட சுதந்திர நல்லிணக்க விசாரணைக்குழு 800 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து உள்ளது.இந்த விசாரணை குழு 50 வருடங்களாக நாட்டை உலுக்கிய மற்றும் 70 லட்சம் மக்களை பலி கொண்ட இந்த உள்நாட்டு போரின் விளைவுகளை ஆவணபடுத்தி உள்ளது.
இதில் அதிகபடியான சம்பவங்கள் தொலிமா மாகாணத்தில் உள்ள மெல்கர் என்ற இடத்தில் நடந்து உள்ளன.உதராணமாக லோடிமைடா விமான தளத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் 50 க்கும் மேற்ட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை ஆபச வீடியோக்களாகவும் எடுத்து உள்ளனர்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி மோதல் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு 7234 பெண்கள் பாதிக்கபட்டு இருப்பதாக பதிவு செய்யபட்டு உள்ளது.
|