ஏமனில் வான்வழித் தாக்குதல்: 1.5 லட்சம் ராணுவ விரர்களை குவித்தது சவுதி

 ஏமன் தலைநகரை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலை தொடங்கியது...











 ஏமன் தலைநகரை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலை தொடங்கியது.


ஏமன் தலைநகர் சனாவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர், அதிபர் மாளிகையை இரண்டாவது முறையாக அவர்கள் நெருங்கிய நிலையில், மாளிகையிலிருந்து அதிபர் மன்சூர் ஹதி புதன்கிழமை வெளியேறினார்.


துறைமுக நகரான ஏடெனிலிருந்து இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விமானப்படை தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக வந்த தகவல் அடுத்து, இன்று அதிபர் ஹைதி அரண்மனையிலிருந்து வெளியேறியதாக உள்நாட்டு செய்திகள் தெரிவித்தன. அவர் கடல் வழியாக தப்பித்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது.


சுமார் 150,000 ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக அல்-அரேபியா செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Related

உலகம் 8250578379494224551

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item