விமானத்தை வீழ்த்திய துணை விமானி!! பயங்கரவாதியா? பிரான்ஸ் விசாரணை!!! (காணொளி)
பிரான்சின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை விபத்திற்குள்ளாகி 150 பேர்களைப் பலி கொண்ட ஜேர்மன்விங்க்ஸ் விமான விபத்து, வ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_978.html

பிரான்சின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை விபத்திற்குள்ளாகி 150 பேர்களைப் பலி கொண்ட ஜேர்மன்விங்க்ஸ் விமான விபத்து, வேண்டுமென்றே செய்யப்பட்ட சதி என்பது தெரியவந்துள்ளது. வெளியே சென்ற பிரதான விமானி வினமானத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்குள் மீண்டும் வரவிடாமல் உள்ளே இருந்த இரண்டாவது விமானி தடைசெய்திருந்தமை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை துணைவிமானியால் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது என்றும், விமானம் விபத்திற்குள்ளாகும் வரை, அவர் சுயநினைவுடனும் உயிருடனுமே இருந்துள்ளார் என்பதும் அவரே விமானத்தை இறக்கி மோதியுள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
28 வயதுடைய Gunther Lubitz என்பவரே இந்த விபத்தை ஏற்படுத்திய துணைவிமானி என மார்செய் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவரது செயற்பாடு விமானத்தை அழிப்பதாகவே இருந்துள்ளது எனவும் இதற்கான காரணம் என்ன? தீவிரவாதமா? தற்கொலையா? இன்னமும் தொடரும் விசாரணைகளின் பின்னரே இந்த முடிவுகள் எட்டப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவர் தனது கட்டுப்பாட்டு அறைக்குள், முதன்மை விமானி நுழைவதைத் தடைசெய்துள்ளார். அதன் பின்னர் விமானத்தைக் கீழே இற்குவதற்கான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளார். இந்த விமானத்தின் உயரத்தைக் குறைத்துத் தரையிறக்குவதென்பது வெறுமனே ஒரு சுட்டியை அழுத்திவிட்டு இறக்கும் காரியமல்ல. அதற்கான பெரும் செலுத்தியை நீண்ட நேரமாகச் செயற்படுத்துவதன் மூலமே இதனைச் செய்யமுடியும். இதனை இந்தத் துணைவிமானி நீண்ட நேரமாக அழுத்தி விமானத்தைத் தரையுடன் மோதியமை, கறுப்புப் பெட்டியின் பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானம் விபத்திற்குள்ளாகவில்லை என்றும் விமானி வேண்டுமென்றே விமானத்தைத் தரையுடன் மோதியுள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. விமானம் முழுமையான பறப்பு வேகத்துடனேயே தரையுடன் மோதப்பட்டுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இனிமேல் அது ஏன் நடாத்தப்பட்டது என்பதை அறிவதே முக்கியமாகும்.
இந்தத் துணைவிமானியின் பெற்றோர்கள் Seyne-les-Alpes இற்குக் கொண்டு வரப்பட்டவேளை, இவர்கள் ஜோந்தார்மரியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate