சிறுமியில் கைவைத்துச் சிக்கிய ஆசிரியர்!!!
Yvelines இல் 63 வயதுடைய ஆசியரியர் ஒருவர் ஆறுவயதுச் சிறுமியிடம் பாலியல் வன்முறை மேற்கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_466.html

Yvelines இல் 63 வயதுடைய ஆசியரியர் ஒருவர் ஆறுவயதுச் சிறுமியிடம் பாலியல் வன்முறை மேற்கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்கு வெளியில், இவரது நெருங்கிய உறவுள்ள ஒரு சிறுமியிடமே இவர் பாலியல் வன்முறை மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் 2011 இலும் 2012 இலும் நடந்துள்ளது. 2005ம் ஆண்டு பிறந்த இந்தச் சிறுமிக்கு, சம்பவச் சமயத்தில் 6 வயதே ஆகியிருந்துள்ளது. Rhône காவற்துறையினர், இந்தச் சிறுமி இவரிற்கு நெருங்கிய உறவுள்ளவர் எனத் தெரிவித்துள்ளது. விசாரணையின் தொடர்ச்சியாக இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
«15 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களிடம் பாலியில் வன்முறை» என்ற குற்றத்தின் கீழ் இவர் மீது வேர்செய் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்தோடு «சிறுவர்கள் பாலியல் படங்கள்» இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கான கடுமையான தண்டனை இவரிற்கு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate