கொழும்பில் ரணில் பாதுகாப்பில் கோட்டா...?
இலங்கை அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. காட்டுத் தீ போல் சுதந்திரக் கட்சி ஆதிக்கம் சந்திரிக்...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_70.html

இலங்கை அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. காட்டுத் தீ போல் சுதந்திரக் கட்சி ஆதிக்கம் சந்திரிக்காவினதும் மைத்திரியினதும் கட்டுப்பாட்டில் வந்த கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு விவகாரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ பற்றியது.
அவர் எங்கிருக்கின்றார் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டாரா? சிங்கப்பூர் போய்விட்டார். மாலைதீவு போய்விட்டார் என்று ஒன்றுக் கொன்று முறனான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் எமக்கு கிடைக்கின்ற நம்பகத்தனமான தகவல்களின் படி அவர் கொழும்பை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரை அப்படி சுலபமாக அனுப்பிவைக்கவும் தற்போதய ஆளும் தரப்பு கடும் போக்காளர்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்ஹவுக்குமிடையில் நடந்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவர் தற்போது ரணில் விக்கிரசிங்ஹாவின் பாதுகாப்பில் மறைவான இடமொன்றில் கொழும்பில் அல்லது புற நகரில் வைக்கப்பட்டிக்கின்றார் என்று தெரிகின்றது.
ரணில் விக்கிரமசிங்ஹாவின் இந்த நடவடிக்கை ஆளும் தராப்பு கடும் போக்காளர்களுக்கு தெரியவந்து சம்பவம் உறுதிப்படுத்தப்படுமானால் ரணிலுக்கு இது விடயத்தில் நெருக்கடி நிலை தோன்ற இடமிருக்கின்றது.
எனவே ஏறக்குறைய ரணில் விக்கரமசிங்கஹாவின் வீட்டுக்காவலில் முன்னாள் பாதுகாப்பச் செயலாளர் பாதுகாக்கப்படுகின்றார் என்று நாம் இதனை எடுத்துக் கொள்ள முடியும்.
கோட்டாவை ரணில் பாதுகாக்கின்றார் என்ற விடயம் கண்டுபிடிக்கப்படும்போது ரணிலுக்கு ஆளும் தரப்பினர் மத்தியில் பலத்த நெருக்கடிகள் தோன்றும்.
கோட்டாபே அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் அவருக்கு அங்கு செல்வது ஆபத்தான காரியமாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.