பிரான்ஸ் ஒரு கேவலமான நாடு - தீப்பற்றி எரியும் உதைபந்தாட்டம்!!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த Bordeaux -PSG உதைபந்தாட்டப் போட்டியில் PSG, போர்தோவிடம் 3-2 என்ற இலக்கில் தோல்வியடைந்துள்ளது. தோல்லியின் பின்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_579.html
இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த Bordeaux -PSG உதைபந்தாட்டப் போட்டியில் PSG, போர்தோவிடம் 3-2 என்ற இலக்கில் தோல்வியடைந்துள்ளது. தோல்லியின் பின்னர், இதில் மூன்றாம் நடுவராகப் பணியாற்றியவர் தவறிழைத்துவிட்டார் என PSG யின் பிரபல விளையாட்டு வீரர் Zlatan Ibrahimovic ஆத்திரத்துடன், மிகக் கேவலமாகப் பிரான்சைத் திட்டியுள்ளார்.
சுவீடன் நாட்டின் வீரரான இவர் "நான் பதினைந்து வருடங்களாக உதைபந்தாட்டம் விளையாடி வருகின்றேன். நடுவர் என்னையென்ன கற்றுக்குட்டி என்று நினைத்து விட்டரா? பிரான்ஸ் ஒரு கேவலமான நாடு (pays de merde). PSG அணியை வைத்திருப்பதற்கு இந்த நாட்டிற்குத் தகுதி இல்லை" எனக் கூச்சலிட்டுள்ளமை பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டுவிட்டர் தளத்தில் உடனடியாக விளையாட்டுத் துறை அமைச்சர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்து உடனடியாக சால்டான் இப்ராகிமோவிக் மன்னிப்புக் கோரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு டுவிட்டரில் ஒருவர் 'எனக்கும் தான் பல IKEA வில் வாங்கிய தளபாடங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதனால் நான் சுவீடனைக் கேவலமாகத் திட்டமுடியுமா?' என எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனடியாகப் பல தொலைக்காட்சிச் சேவைகளும் இதற்கான விவாதங்களை எழுப்பிக் கண்டனங்கள் எழுப்பி உள்ளனர்.
இதன் பிறகாக "நான் பிரெஞ்சு மக்களைச் சொல்லவுமில்லை, பிரான்ஸ் நாட்டைச் சொல்லவில்லை. இது பிழையாக விளங்கப்பட்டுள்ளது. இது யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்" என Facebook இல் சால்டான் இப்ராகிமோவிக் கதையை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளார்.
ஆனாலும் காணொளியில் இவர் பிரான்சைக் கேவலமாகத் திட்டியது தெளிவாகப் பதிவாகி உள்ளது.





Sri Lanka Rupee Exchange Rate