சமயத் தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் – கெபே
தேர்தல் நடவடிக்கைகளுக்காக சமய ஸ்தானங்களை பயன்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கெபே அமைப்பு சமயத் தலைவர்களைக் கேட்டுள்ளது. பௌத்த சமயத...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_38.html
தேர்தல் நடவடிக்கைகளுக்காக சமய ஸ்தானங்களை பயன்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கெபே அமைப்பு சமயத் தலைவர்களைக் கேட்டுள்ளது. பௌத்த சமயத்தவர்கள் சமய நடவடிக்கைகளுக்காக அணியும் சில் உடை மற்றும் பல்வேறு பொருட்கள் என்பன வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்துடன் பகிர்ந்தளிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.ஜனாதிபதித் தேர்தல் சட்டம் 79 ஆம் சரத்தின் படி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றமாகும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் 883 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது


Sri Lanka Rupee Exchange Rate