மைத்திரியின் கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கான வருகை ரத்து
[youtube https://www.youtube.com/watch?v=BF0G2U__pJI] இன்று வியாழக்கிழமை (01.01.2015) காலை முஸ்லிம் மக்களை சந்திப்பதற்காக கொழும்பு பெரிய பள்...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_68.html
[youtube https://www.youtube.com/watch?v=BF0G2U__pJI]
இன்று வியாழக்கிழமை (01.01.2015) காலை முஸ்லிம் மக்களை சந்திப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கு வருகைதரவிருந்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தவிர்க்க முடியாத காரணத்தினால் அவருடைய வருகை ரத்துச் செய்யப்பட்டது.
காலை எட்டு மணியில் இருந்து பகல் ஒரு மணி வரைக்கும் மைத்திரிபால சந்திப்பதற்காக ஆவலுடன் கொழும்பு வாழ் மக்கள் காத்திருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மேலும் காலையில் மைத்திரிபலவை வரவேற்று கொழும்பு வாழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காக இந் நிகழ்வை ஏற்பாடு செய்த மேல் மாகான சபை உறுப்பினர்களன பைரூஸ் ஹாஜியும், முஜிபுர் ரஹ்மானும் பெரிய பள்ளிவாயலுக்கு நேரகாலத்துடனேயே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாக இருந்தாலும்இ அதற்கு பிற்பாடு மைத்திரியை வரவேற்பதற்காக கொழும்பு மாநகர மேயர் எம்.ஜே.எம்.முசம்மிலுடன் மட்டகளப்பு மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் வருகை தந்திருந்தார்.
இறுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த மக்களின் ஏமாற்றத்துக்காக மேல் மாகான சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது., அரசியலில் என்ன மாற்றம் நிமிடத்துக்கு நிமிடம் நடக்கும் என ஊகிக்க கடிணமாக உள்ளதாகவும், ஆளும் கட்ச்சியிலிருந்து முக்கிய பாரளமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று மைத்திரிபாலவுடன் கைகோர்க்க உள்ளதனால் அவர்களுடன் முகியமான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டிய தேவையினை கருத்தில் கொண்டு மைத்திரிபாலவின் விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்களிடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதோடு மைத்திரிபால ஜானதிபதியானவுடன் நிச்சயமாக கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கு அவரை அழைத்து வருவது எனதும் பைரூஸ் ஹாஜியினதும் கடமை எனக் கூறினார்.