அரசாங்கம் அடிப்படை வாதத்தை தூண்டி விட்டு வருகிறது: அத்துரலிய ரத்ன தேரர்
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தி பயங்கரவாதமொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவையில் அரசாங்கம் உள்ளதாகவும், தனது கள்ளத் த...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_15.html
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தி பயங்கரவாதமொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவையில் அரசாங்கம் உள்ளதாகவும், தனது கள்ளத் தனமான செயற்பாடுகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் அடிப்படை வாதத்தை தூண்டி விட்டு வருவதாகவும் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை எந்த பேதங்களுமின்றி வடக்கில் மீள் குடியேற்றவுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்துக்கு வடக்கில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கு முடியாமல் போனதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate