பொத்துவில் அறுகம்மையில் 02 இஸ்ரேலியர்கள் கைது

புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில்இரண்டு இஸ்ரேலியர்களைக் கைது செய...



புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில்இரண்டு இஸ்ரேலியர்களைக் கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் அறுகம்மைக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வந்திருந்த இஸ்ரேல் டிமோனா பிரதேசத்தைச் சேர்ந்த எலியர் பென் சுஷான் யோசப் மற்றும் அவரது துணைவியாரான பென் ஆப்ராமோவிச் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தருக்கும் பௌத்த மதத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்திய குற்றச் சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சீலை விரிப்பில் அமர்ந்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தங்களுக்குத் தெரியாதென்றும் தாங்கள் இந்தியாவுக்கு உல்லாசப் பயணிகளாக சென்றிருந்த பொழுது இந்த விரிப்பை வாங்கியிருந்ததாகவும் இந்தியாவில் இது ஒரு குற்றச் செயல் அல்ல என்றும் தாங்கள் அறிவதாகவும் அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 3927717109633564776

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item