விளையாடச் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோகம் ; பொத்துவிலில் சம்பவம்

பொத்துவில், குண்டுமடு பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்...

பொத்துவில், குண்டுமடு பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குண்டுமடு பகுதியில் அயல் வீட்டுக்கு விளையாடச் சென்ற குறித்த சிறுமியை தனியான அறைக்குக் கூட்டிச்சென்று நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

இலங்கை 4013384534362303892

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item