சஜின் வாஸ் குணவர்த்தனவிடம் எட்டு மணிநேரம் விசாரணை!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவிடம் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகள் ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_276.html

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவிடம் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகள் எட்டு மணித்தியாலங்கள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தார் என சஜின் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 அளவில் ஆணைக்குழுவிற்கு சென்று சஜினிடம் மாலை 4.15 வரையில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் பணத்தை மோசடி செய்து, அதனை சொந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாகவும் சஜின் வாஸிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இதேவேளை, விசாரணைகளுக்கு தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.