13ஆம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்!- இந்திய பிரதமர் அழுத்தம்(video)
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று இந்திய பிரத...
http://kandyskynews.blogspot.com/2015/03/13-video.html

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பின்னர், நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது இதனை அறிவித்தார்.
சிறிலங்காவில் அனைத்து சமூகங்களின் அபிலாசைகளும் நிறைவேற்றப்படும் வகையில் எதிர்காலம் ஒன்றை உருவாக்குவாற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்கும் குறிப்பாக தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சுய கௌரவம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு 13ஆம் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் அதற்கு அப்பால் செல்வதே தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையர்களுக்கு இந்தியாவின் வருகைக்கு பின்னரான விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate