65 வயதில் 4 குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் பெண்
65-வயதுடைய அன்ங்ரேட் ரவுனிங்க் பெர்லினில் உள்ள பாடசாலையில் ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி பயிற்சி அளிக்கும் ஆசிரியராக உள்ளார். ரவுனிங்கிற்கு...


ரவுனிங்கிற்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளது 13 குழந்தைகளும் 5 வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்தவர்கள்.
அவருடைய 13 பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு குழந்தையும் உள்ளது.
இதேவேளை அவரது 9 வயதுடைய கடைசி மகளுக்கு சிறு குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்று மிகவும் ஆசை, எனவே தனது அம்மாவிடம் (ரவுனிங்க்) தனக்கு ஒரு தம்பி அல்லது தங்கை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
பின்னர் ரவுனிங்க் தனது செல்ல மகளின், ஆசையை நிறைவேற்ற மீண்டும் கர்ப்பம் அடைய ஆர்வம் காட்டினார்.
65-வயது ஆன நிலையிலும் ரவுனிங்கின் ஆர்வத்திற்கு பலன் கிடைத்தது, தற்போது ரவுனிங்க் 21 வாரம் கர்ப்பிணியாக உள்ளார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு சென்று வருகிறார் மருத்துவ பரிசோதனையில் அவருடைய வயிற்றில் 4 குழந்தைகள் வளருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் 4 இதயங்கள் துடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தானமாக வழங்கப்பட்ட கருமுட்டைகள் மற்றும் விந்து அணுக்கள் அவருடைய கருப்ப பையில் வைக்கப்பட்டுள்ளது “நான் பயப்படவில்லை, தொடர்ந்தும் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.