கட்டார் விபத்தில் இலங்கையர் மூவர் ஸ்தலத்திலேயே பலி! - மூவரும் ஒரே ஊர் இளைஞர்கள்!
கட்டார் டோஹாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தது பற்றியும் இறந்தவர்கள் இலங்கையர்களாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் நேற்று செய்தி வெளியிட...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_170.html
கட்டார் டோஹாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தது பற்றியும் இறந்தவர்கள் இலங்கையர்களாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.. அது பற்றிய முழு விபரம்.கட்டாரில் டோஹா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனை தமிழ் பிரிவு பெரிய நீலாவணை கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெரிய நீலாவணைக் கிராமத்தில் இருந்து வெளிநாட்டில் தொழில் புரிவதற்காகச் சென்ற இளைஞர்களே இவ் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நான்கு இளைஞர்கள் காரில் பயணித்துள்ளனர். எதிர்பாராத விதமாக முன் டயர் வெடித்துள்ளதுடன் பெற்றோல் டாங்கும் தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திலே காரில் பயணித்த இளைஞர்கள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உறவினர்களுக்கு அறிவித்ததை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறியழுதனர். சனிக்கிழமை மாலையே இவ்விபத்து தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை கட்டாரில் உள்ள உறவினர்களும் உறுதி செய்துள்ளனர். இதில் பெரிய நீலாவணைக் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசா சஜீத் கிருஷ்சானந்தன் (29 வயது), கமலமோகன் கஜானந்தன் (29 வயது), சின்னையா கோபி (27 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளதுடன் இவர்களுடன் பயணித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞன் கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது தொடர்பில் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் துடன் தொடர்புகொண்டுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate