தன்னையும் ஜனாதிபதி என்றே அழைக்கின்றனராம்!

தம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று உருவ ஒற்றுமை கொண்...

MRRSதம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று உருவ ஒற்றுமை கொண்ட ஆர்.ஏ சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த,மைத்திரி என்ற இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு அப்பால் பேசப்பட்ட ஒருவரே ஆ.ஏ சிறிசேன என்ற வேட்பாளராவார்.

உருவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒத்த உருவத்தைக் கொண்ட இவர், மைத்திரிபாலவின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டவர். இவர், மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான மெதமுலனவைச் சேர்ந்தவர்.தேர்தலின் போது பலர் சிறிசேன என்ற பெயரை கண்டு இவருக்கும் வாக்களித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கொழும்பின் ஊடகம் ஒன்று அண்மையில் அவரை செவ்வி கண்ட போது தம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக குறிப்பிட்டார். தம்மை யாரும் தேர்தலில் போட்டியிடுமாறு கோரவில்லை.தாம் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்களில் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரத்துக்கு நடித்து புகழ் பெற்றமையால் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரசாரத்துக்காக 5 லட்சம் ரூபாய்கள் செலவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் தேர்தலில் 18ஆயிரத்து 174 வாக்குகளை பெற்றுள்ளமையால் தாமே நாட்டில் மூன்றாவது முக்கியமானவர் என்று நினைப்பதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 3910765003907107412

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item