திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு மன்னிப்பு அளிக்க ரணில் முடிவு?
இறுதி நேரத்தில் மஹிந்த பக்கம் பாய்ந்த முன்னாள் ஜ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு மீண்டும் கட்சியில் இணைத்...


திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஜ.தே.கவுடன் இணையும் பேச்சுக்களினை ஏற்கனவே நடத்தியதாக தெரியவருகின்றது. அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ள ரணில் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பதவிகள் ஏதும் இப்போதைக்கு வழங்கப்படமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை தான் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, இணையங்கள் சில தான் நாட்டை விட்டு தப்பித்து சென்றுள்ளதாக பிரச்சாரங்களை செய்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார். மஹிந்த தரப்புடன் இணைந்த திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டிருந்ததுடன், அவர் அப்பதவியினை 21 நாள்கள் மட்டுமே அவர் வகித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.