சலுகைகளுடன் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடுவது அநீதியானது: அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகளுடன் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடுகின்றமை, ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கும் விடயம் என தெரிவித்து, உ...


நவ சமசமாஜக் கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள சட்டத்தரணி சேனக்க பெரேர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைத் தவிர, தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸ் மாஅதிபர், சட்டமா அதிபர், பொது அமைதி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அந்த அமைச்சின் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைக் குறைந்தது தேர்தல் காலத்திலாவது குறைக்குமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணி இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவொன்றைக் கையளித்துள்ளது.