குரக்கனுக்காய் சால்வை அணிந்தவர் தேங்காய்க்காய் வளையம் செய்துகொள்வாரா?
மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த கூட்டமொன்று ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று (17) நடைபெற்ற...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_449.html

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த கூட்டமொன்று ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாவது;
ராஜபக்ஸவின் சூழ்ச்சியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்க வேண்டும் என இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். மீட்கக்கூடிய ஒரே வழி, இந்தத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பம் தோற்கடிக்கப்பட வேண்டும். ஹம்பாந்தோட்டையை சொந்தம் கொண்டாடிய அவர், தற்போது குருநாகலுக்குத் தாவியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் குரக்கன் பிரசித்தி பெற்றமையினால், அவர் அதன் நிறத்திலான சால்வையை அணிந்தார். தற்போது குருநாகல் சென்றுள்ளார். அங்கு தேங்காய் பிரசித்தி பெற்றுள்ளது. அதனால் தேய்காய் பறிப்பதற்கான வளையத்தை செய்துகொள்ளப் போகின்றாரா என ஒருவர் என்னிடம் கேட்டார்.