டெல்லியில் கிறிதுஸ்வ பள்ளிக்கூடம் தாக்குதல்: அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்
டெல்லியில் கிறிஸ்துவ பள்ளிக்கூடம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற...


இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
"ஹோலி ஆக்ஸிலியம் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் ஹோலி சைல்டு கிறிஸ்துவ ஆலயம் உள்ளது இந்த ஆலயத்துக்கு அருகில் புனித குழந்தை உதவி மைய கிறிதுஸ்வ பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிகூடத்தின் மீது நேற்று இரவு மர்ம ஆசாமிகள் தாக்குதல் நடத்தி உள்லனர்.இதை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டது. பள்ளிக்கு இன்று காலை வந்த மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை தான் வெளிச்சத்துக்கு வந்தது. அங்குள்ள சிசிடிவு கேமிராவை ஆய்வு செய்ததில் 2 ஆசாமிகள் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் பளளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தை தாக்கி உள்ளனர்.இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை என ஆலயத்தின் அதிகாரி கூறினார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிறிதுஸ்வ பள்ளிக்கூடம் மர்ம நபர்கள் தாக்கபட்டதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியில் கிறிஸ்தவ அமைப்புகள் மீது நடத்தப்பட்டுள்ள 6-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் வஸந்த கஞ்ச் பகுதியில் உள்ள தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.