போட்டிகள் தொடங்கும் முன்பே 8 பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்

அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களுக்கு, பாதுகாப்பு விதி முறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ...

அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 8 வீரர்களுக்கு, பாதுகாப்பு விதி முறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


நாளை (14-02-15) முதல் 11ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனால், பங்கேற்கவுள்ள 14 அணிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.




இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேரும் இரவில் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு 45 நிமிட நேரம் தாமதமாக ஓய்வறைக்குத் திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீண்டும் இதே போன்று விதிமுறைகளை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஒழுக்க விதிமுறைகளை மிறியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதோடு தாங்கள் அதே மாதிரியான தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

பாகிஸ்தான் தனது பயிற்சி ஆட்டம் இரண்டிலும் (பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 15ஆம் தேதி பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை அடிலெய்டில் எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரடி, “இந்த முறை நாங்கள் வரலாற்றை மாற்றுவோம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related

சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்காரா

கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான சியெட் கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா, கடந்தாண்டின் சிறந்த சர்...

இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து தோல்வி

இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 389 ஓட்டங்களையும், நியூசிலாந்து 523 ஓட்டங்களையும் ப...

5 மில்லியன் பவுண்டு நிதியுதவி வழங்கிய ரொனால்டோ

 நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ந...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item