இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து தோல்வி
இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_195.html
134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இனிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 429 ரன்கள் எடுத்து இருந்தது. குக் 153 ஓட்டங்களுடனும், மொயீன் அலி 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 5 ஆவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஆடிய குக் 162 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டூவர்ட் பிராட் 10 ஓட்டங்களுடனும், ஜேம்ஸ் அண்டர்சன் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதனடிப்படையில் இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 478 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்க்களையும், டிம் சவுதி, மேட் ஹென்ரி தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 345 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் 2 ஆவது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்டில், டிம் லதாம் ஆகியோர் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். அடுத்து ரோஸ் டெய்லர் 8 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 27 ஓட்டங்களுடனும், பிரன்டன் மெக்கல்லம்ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.
6 ஆவது விக்கெட் இணையான வாட்லிங், கோரி அண்டர்சன் தோல்வியை தவிர்க்க சிறிது நேரம் போராடினார்கள். வாட்லிங் 59 ஓட்டங்களுடனும், கோரி அண்டர்சன் 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். பின்னர் நியூசிலாந்து அணி 67.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது. இதனால் இங்கிலாந்து அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.