சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்...



சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது.

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை அமைத்ததன் ஊடாக ஏதேனும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டால் இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இழக்கும் என அறிவித்துள்ளது.

இவ்வாறு உறுப்புரிமை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டால, உலகக் கிண்ணப் போட்டித் தொடர் போன்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை பங்கேற்க முடியாது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசியல் தலையீடு செய்யப்பட்டால் அது பேரவையின் 2.9 பி சரத்திற்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து நம்பகமான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் எவ்வித தவறும் கிடையாது என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அண்மையில் இடைக்கால கிரிக்கெட் சபையொன்றை நிறுவி அதன் பொறுப்புக்களை முன்னாள் வீரர் சிதத் வெத்தமுனியிடம் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

கால்பந்து தாத்தாவின் வலையில் ரொனால்டோ காதலி! வெளிச்சத்திற்கு வந்த பிளாட்டரின் மன்மத லீலைகள்

சர்வதேச கால்பந்து நிர்வாகத்தில் கொடிகட்டி பறந்த செப் பிளாட்டரின் பல்வேறு மன்மத லீலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 79 வயதான சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டர், சமீபத்தில் சர்வதேச கால்பந்து கூட...

காதல் மனைவியுடன் கலக்கிய வாசிம் அக்ரம்: புத்துணர்வு பெற்ற வாழ்க்கை

சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரமுக்கு இப்போது தான் வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. அவர் கிரிக்கெட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் போது 30வ...

இரு வருடங்களில் 2000 ஓட்டங்களைக் கடந்தார் ஸ்டீபன் ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீபன் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு வருட காலப்பகுதியில் 2000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்கி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item