கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வாகனத்துக்கு தீ வைப்பு..!
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீபின் வாகனம் இனம்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இதன...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_12.html
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீபின் வாகனம் இனம்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.இச்சம்பவம் இன்ற செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருதமுனை- பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வாகனம் தீயிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும் அக்கட்சியின் மருதமுனை பிரதேச அமைப்பாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீபின் வாகனம் தீயிடப்பட்ட சம்பவத்தை கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் வண்மையாக கண்டித்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமது சங்கம் பொலிஸாரைக் கோரியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ரொசான் அக்தர் தெரிவித்தார்.