காளை சண்டை வீரரை அந்தரத்தில் தூக்கிபோட்டு பந்தாடிய எருது (வீடியோ இணைப்பு)
ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை வீரரை எருது முட்டி காயப்படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் பிரபல காளை ச...


ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை வீரரை எருது முட்டி காயப்படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் பிரபல காளை சண்டை வீரரான லொரென்சோ சான்சிஸ்.
இந்நிலையில் இவர் மாட்ரிட் லாஸ் வெண்டாசில் எருது ஒன்றுடன் சாகசம் நிகழ்த்தி கொண்டிருந்தார். திடீரென எருது அவரை தாக்க தொடங்கியது.
அவரை தனது கொம்பால் முட்டி அந்தரத்தில் தூக்கி போட்டு பந்தாடியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் எருதின் கவனத்தை திசை திருப்பி அவரை மீட்டனர்.
இந்த தாக்குதலில் அவரின் முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பயங்கர காயம் ஏற்பட்டது.
எனினும் அவரது உயிர்க்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.