இறுதி நேரத்தில் கொழும்பில் இராணுவத்தை குவித்து ஆட்சியில் நிலைக்க முயற்சி எடுக்கப்பட்டது : ராஜித
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கையில் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இராணுவ தளபதி த...

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கையில் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இராணுவ தளபதி தயா ரத்நாயக்கவினால் நிராகரிக்கப்பட்டதால் இறுதிக் கட்டத்தில் தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதுரலியே ரத்தன தேரர் மற்றும் இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரியவுடன் இணைந்து இன்று நடாத்திய ஊடகவியலார் சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் இணையத்தளங்கள் முடக்கப்பட மாட்டது எனவும், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர் வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.