தமிழில் தேசிய கீதத்தை ‘அப்போதே’ வலியுறுத்தினேன்: மஹிந்த
இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி மைத்ரி பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் அது...


அவ்வப்போது அரசியல் மேடைகளில் தமிழ் மொழியில் உரைநிகழ்த்தியிருந்து போதிலும் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதில் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்திருந்தன. எனினும், தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்மு அவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச, நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அண்மையில் லண்டன் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால வெளிப்படையாகவே பொது பல சேனா ஒரு நிராகரிக்கப்பட்ட அமைப்பு என தெரிவித்திருந்தார்.
எனினும், இலங்கை எனும் பெயரே மாற்றப்பட்டு ‘சிங்ஹலே’ என அழைக்கப்பட வேண்டும் எனவும் சிங்ஹல மொழியில் மாத்திரமே அனைத்தும் அமைய வேண்டும் எனவும் கூறி மாநாடும் நடாத்தியகுறித்த அமைப்பை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் பங்களித்ததாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி அவ்வமைப்பு தொடர்பாக அப்போதும், இப்போதும் கூட நேரடியாக எதுவிதமான கருத்தையும் கூற மறுத்து வருகின்றமையும் பொது பல சேனா நேற்றைய தினம் பூங்காவில் கூடி எதிர்காலம் தொடர்பாகக ;கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.