ஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே சகவிமானியால் வீழ்த்தப்பட்டது

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியத...

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

விமானி அறையில் இருந்த ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைத்த தகவல்களை ஆராய்ந்த பிரெஞ்சு புலனாய்வாளர்கள், விமானத்தின் சக விமானி, விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து, வேண்டுமென்றே விமானத்தைக் கீழ் நோக்கிக் கொண்டு சென்றதாகக் கூறினர்.

விமானிகள் அறையில் இருந்து அப்போதுதான் வெளியே சென்ற தலைமை விமானி மீண்டும் உள்ளே வர முடியாத நிலையில் விமானி அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததாம்.

விமானி மற்றும் சகவிமானியின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

சகவிமானி விமானம் இறுதியாக மலையில் மோதி நொறுங்கும் வரை உயிருடன் இருந்ததாகவும் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டுசல்டார்ப் நகருக்கு சென்று கொண்டிருந்த இந்த ஏர்பஸ் 320 விமானம் செவ்வாய்க்கிழமை மலையில் மோதி நொறுங்கியது.

இதில் பயணித்த அனைத்து 150 பயணிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 14 பள்ளிச் சிறார்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



பிரான்ஸ் விமான விபத்து: முதல் கருப்பு பெட்டியிலிருந்து தகவல் கிடைத்தது

ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் 4யூ 9525 என்ற பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த பயனுள்ள தகவல்கள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.




விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.



இதுகுறித்து, ஆய்வினை மேற்கொண்டு வரும் பிரெஞ்சு விமான விபத்து விசாரணையமைப்பின் தலைவரான ரெமி ஜவுடி கூறுகையில், “தற்போது, விமானத்திலிருந்த காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரிலிருந்து பயனுள்ள தகவல்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது” என்றார். ’காக் பிட்’ எனப்படும் விமானியின் அறையில் கேட்கும் சத்தங்களை, கருப்பு பெட்டி பதிவு செய்து வைத்திருக்குமென்று விளக்கமளித்த ரெமி, “விபத்துக்கான காரணம் குறித்தோ அல்லது அது ஏன் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொள்ளவில்லை என்பது குறித்தோ ஒரு சிறிய விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை” என்று திட்டவட்டமாக விபத்துக்கான காரணம் குறித்து கூற மறுத்தார்.



செய்தியாளர் சந்திப்பிற்கு சில நிமிடங்கள் முன்னர்தான் தன்னிடம் அந்த தரவுகள் தரப்படுமென்றும், விசாரணை ஆய்வாளர்கள் கருப்பு பெட்டி பதிவுகளை இன்னும் ஆய்வு செய்து முடிக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.



விமானத்தின் தொழில்நுட்ப தரவுகள் அனைத்தும் இரண்டாவது கருப்பு பெட்டியிலேயே பதிவாகியிருக்கும் என்பதால், அதைக் கண்டுபிடிக்கும் பணி, விபத்து நடந்த ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related

உலகம் 6992876579151465070

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item