மஹிந்த ஸ்ரீ.சு.கவின் பிரதமர் வேட்பாளர்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செ...


இரத்தினபுரியில் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, ரோஹித போகொல்லாகம, உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்கவென மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ளதுடன்,
மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதற்கு முன்னரும் கண்டி, மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளில் பேரணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கூட்டங்களுக்கு எதிர்ப்பார்த்தளவு மக்கள் சமூகம் தராதமை மஹிந்த ஆதரவாளர்கள் மத்தியில் கவலை அளித்துள்ளது.