பொருளாதாரத் தடைகள் விலக்கப் படும் வரையில் அணு ஒப்பந்தம் கிடையாது!:ஈரான்
அண்மையில் ஈரானுக்கும் P5+1 நாடுகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் எட்டப் பட்ட அணு ஒப்பந்தத்தில், தான் கைச்சாத்திட்டு அதனை இறுதி செய்ய...

![]() |
அண்மையில் ஈரானுக்கும் P5+1 நாடுகளுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் எட்டப் பட்ட அணு ஒப்பந்தத்தில், தான் கைச்சாத்திட்டு அதனை இறுதி செய்ய வேண்டும் எனில் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் படும் முதல் நாளில் இருந்து தம்மீது சுமத்தப் பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகள் நீக்கப் பட வேண்டும் என ஈரான் சார்பாக அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி வியாழக்கிழமை காட்டமாக அறிவித்துள்ளார்.
மறுபுறம் ஈரானின் ஆன்மிகத் தலைவரான அயதொல்லா அலி கமேனெய் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் மேற்கண்டவாறு அணு ஒப்பந்தம் கைச்சாத்திட இறுதி நிமிடம் வரை ஈரானின் பொருளாதாரத் தடைகளை மேற்குலகங்கள் விலக்குவது தொடர்பில் சந்தேகம் தெரிவித்துள்ளார். 6 உலக சக்திகளும் ஈரானும் கடந்த வாரம் ஈரானின் யுரேனியச் செறிவூட்டலை இன்னமும் 13 வருடங்களுக்குள் வெகுவாகக் குறைத்து அது அணுவாயுதம் தயாரிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் அதே நேரம் அதன் மீது சுமத்தப் பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வது என்ற ஒப்பந்தத்தை எட்டியிருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப் படாத நிலையில் இதற்கு முன்னோட்டமாக செய்யப் பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் கூட இன்னமும் முற்றுப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரானுக்கும், அமெரிக்கா, சீனா, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கும் இடையே ஒப்பந்ததத்தை ஏற்படுத்திய அந்நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை குறித்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்குக் கால அவகாசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. |