இனவாதம் பேசும் மத அமைப்புக்களுக்கு தடை ; அரசாங்கம் உறுதிமொழி
இலங்கையில் இனத்துவேசத்தை முன்வைக்கும் மத மற்றும் சமய அமைப்புக்களை தடை செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகி...

பிரித்தானியாவின் பொதுச்சபை கூட்டத்தின் போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பொதுபல சேனா உட்பட்ட அமைப்புக்கள் செயற்பட்ட விதம் குறித்து பொதுசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட ஞானசார தேரரை இலங்கையின் பத்திரிகை ஒன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, இலங்கையில் இனத்துவேசம் பேசப்படுமானால் சிறுபான்மையினர் எவ்வாறு சமாதானமாக வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார்.