பிரதமர் ரணில் அமைச்சர்களை சந்திக்கிறார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_120.html
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இன்று வௌ்ளிக்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் பங்குபற்றுமாறு அமைச்சர்களுக்கும் பிரதியமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுககும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டம் என்பன குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 100 நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது. அரசாங்கத்தின் 27 பேர் கொண்ட அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார அலுவல்கள் அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.



Sri Lanka Rupee Exchange Rate