அரச ஊழியர்களுக்கு அடித்தது அதிஷ்டம்
மாற்றத்தை நோக்கிய மைத்திரியின் ஆட்சியில் 100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத்திட்டங்களில் பல அபிவிருத்தி திட்டங்களும், அதி...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_797.html

மாற்றத்தை நோக்கிய மைத்திரியின் ஆட்சியில் 100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத்திட்டங்களில் பல அபிவிருத்தி திட்டங்களும், அதிஷ்டங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதில் அரச ஊழியர்களுக்கு ரூபா 10,000 சம்பள உயர்வும் உயர்வும் இருந்தது.
முன்னைநாள் அரசாலும் தேர்தல் காலங்களில் பல சுவாரஸ்யமான திட்டங்கள் உள்ளடக்கப்பட்ட போதும் அமுலுக்கு வரவில்லை.
தற்போதய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போது நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்தும் செயல்வடிவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, அந்த வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதிற்கு அமைவாக நடைமுறைக்கு வரும் வகையில் 2015 பெப்ருவரி மாத சம்பளத்தை ரூபா 5,000 அதிகறித்துள்ளதாக அறிய வருகின்றது.
இந்த மாற்றத்தை நோக்கிய மைத்ரி அரசில், அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்கி, அதன் முதல்படியாக உடன் நடைமுறைக்கு வரும் வகையில், 2015 பெப்;ருவரி மாத சம்பளத்தை ரூபா 5,000 ஆக உயர்த்துதல். சகல கொடுப்பனவுகளும், படிகளும் உள்வாங்கப்பட்டு எஞ்சிய தொகையும், அடுத்தடுத்து வரும் சம்பளத்தோடு வழங்கப்படும்.
இதற்கான முன்மொழிவுகள், புதிய அரசில், இம்மாதம் 29ஆம் திகதி புதிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate