போதைப் பணத்தில் பொதுபலசேனா
பொபல சேனா அமைப்பு பௌத்த பேரினவாதத்தைத் தூண்டி நிலைத்து நிற்க முயன்று தோல்வி கண்டுள்ள நிலையில் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து வந்த தேசிய உணவகங்க...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_283.html
பொபல சேனா அமைப்பு பௌத்த பேரினவாதத்தைத் தூண்டி நிலைத்து நிற்க முயன்று தோல்வி கண்டுள்ள நிலையில் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து வந்த தேசிய உணவகங்களின் சங்கத்தின் அமைப்பாளர் அசேல சம்பத் என்பவர் தெரிவத்துள்ளார்.தமது ஆரம்பம் பற்றி வேறு வகையில் கூறித்திரிந்த குறித்த அமைப்பு பின்னர் அரசியலுக்குள் நுழைந்து, அதன் பின் மஹிந்த ராஜபக்சவுக்காக பணிபுரியப் போவதாக தெரிவித்ததையடுத்து தான் அவ்வமைப்பை விட்டு விலகியதாக தெரிவிக்கும் இவர், குறித்த அமைப்பு ரந்தெனிகல மதுபான நிறுவனத்தின் தலைவர் சரத் ரந்தெனிகலவிடம் 40 லட்ச ரூபா பெற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரியா சென்று அங்கு பணிபரியும் இலங்கையைர்களிடமும் இவ்வமைப்பு பணம் பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். பொது பல சேனா அமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எனவே ஆரம்பத்தில் எதிர்பார்ர்த்த போதும் அவ்வாறின்றி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக தெரிவித்தமை அவ்வமைப்பு குறித்து அதுவரை நிலவி வந்த பல்வேறு ஊகங்களை நிரூபித்த நிலையில் அவ்வமைப்புக்குள் பல்வேறு உட்பூசல்கள் நிலவி வந்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன.
தற்போதும் பொதுத் தேர்தலிலாலது தமது பேரினவாத கோசத்தை முன்வைத்து மீண்டும் தலைதூக்க அவ்வமைப்பு முனையும் நிலையிலேயே அவ்வமைப்பு மதுபான விற்பனையில் பெறும் பணத்தில் இயங்கியது குறித்து குறித்த நபர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate