கொழும்பில் உள்ள முஸ்லீம்; மாணவர்களது கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது -அமீர் அலி
அஸ்ரப் ஏ சமத் நான் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இருந்து வந்து அப்போது கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_122.html
நான் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இருந்து வந்து அப்போது கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்கும்போது கல்லூரியின் சார்பாக முஹம்மத் நபி (ஸல்) பிறந்த தினத்தில் பேச்சுப்போட்டிக்காக இந்த கல்ச்சரல் ஹோமில் பயிற்சி எடுத்து முதலாம் இடத்தை பெற்றேன்.
அன்று இந்த மூர் இஸ்லாமிக் கலச்சார கோம் தான் பேச்சுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தது. அந்த பயிற்சிதான் இன்று அரசியல் வாதியாக வந்து இந்த இடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்.
மூர் இஸ்லாமிக் கல்ச்சரல் கோம் 62வது முறையாக நடாத்தும் மீலாதுன் நபி பரிசளிப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்; அலி தெரிவித்தார்..
இந் நிகழ்வில் நாடெங்கிலும் இருந்தும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் பணப் பரிசில்களும் ;வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு முர் ;இஸ்லாமிக் கல்ச்சரல் கோம் தலைவர் ஒமர் காமீல் தலைமையில் ;நடைபெற்றது.
மேலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த சவுதி ரோயல் ;குடும்பத்தின் விசேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்டின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் – கொழும்பில் உள்ள முஸ்லீம்; மாணவர்களது கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த நாட்டில் தமக்கு இறுதியாக மிஞ்சியிருப்பது கல்வி மாத்திரம் தான் தமது மகன் அல்லது மகளை ஒரு பொறியியலாளராக, வைத்தியராக சட்டத்தரணியாக அல்லது ஒரு ஹாபீழாக உறுவாக்குவதற்கு பெற்றோர்களே முன் வந்து அதற்காக தியாகம் செய்து தமது எதிர்காலச் சந்ததியினரை உருவாக்க வேண்டும்.
ஆனால் கொழும்பில் வாழும் எமது சமுகம் என்றும் சொந்த தொழிலாக முச்சக்கர வண்டி ஓட்டுரனராகவோ அல்லது பாதையோர வியாபாரியாகவோ எந்நாளும் இருக்க முடியாது. கொழும்பு பிரதேச பாடசாலையில் கல்வி கற்பதற்கு மட்டக்களப்பு அம்பாறை அல்லது யாழ்பாபணத்தில் இருந்து தான் நாம் ஆசிரியர்களை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. நமது பிரதேச வாழ் ஆசிரியர்களை நாம் உருவாக்க வேண்டும். எனவும் பிரதியமைச்சர் உரையாற்றினார்.
இந்த கல்ச்சரல் ஹோம் அரசியலுக்கப்பால் முஸ்லீம் சமுகத்திற்கு பல் வேறு வகைககளில் உதவி வருகின்றது. என பிரதியமைச்சர் உரையாற்றினார்.
NULL



Sri Lanka Rupee Exchange Rate