கோத்தபாயவை கைது செய்ய களமிறங்கும் இன்டர்போல் பொலிஸார்!
சட்டவிரோதமான முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் கோத்தபாயவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட...

![]() |
சட்டவிரோதமான முறையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் கோத்தபாயவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சிறிலங்கா நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கோத்தபாயவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவுள்ளனர்.
ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பணம் சட்டவிரோதமான வழிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டமை, ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈட்டிய பணத்தை அரசாங்க கணக்குகளில் வைப்பிலிடாமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கோத்தபாய பல பில்லியன் ரூபாவை கொள்ளையடித்துள்ளதாக தெரிய வருகிறது.
கோத்தபாயவை கைது செய்யவது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.
ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பாரியளவில் பணம் திரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என கோத்தபாய நியாயப்படுத்த முயற்சித்த போதிலும் உண்மையில் இந்த நிறுவனம் அவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் என ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல்களில் தனியார் நிறுவனமொன்று ஈடுபட வேண்டுமாயின், பாராளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போதிலும், ரக்னா லங்கா நிறுவனம் அவ்வாறான அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை.
கோத்தபாய ராஜபக்ஸ பயங்கரவாதிகள் மற்றும் கடற் கொள்ளையர்களுடன் தொடர்புகளைப் பேணியமை தொடர்பில் சர்வதேச காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் சிறிலங்காவின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் வாரமளவில் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
|