வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது. குறித்...
வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது.
குறித்த 11 ஆவது உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தப் போகும் அணி எது என்பது மார்ச் மாதம் 29 ஆம் திகதி தெரிய வரும்.
ஆரம்பத்தில் ஒவ்வொரு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போதும், வெவ்வேறு வடிவங்களில் கிண்ணம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் போது தான் நிரந்தர வடிவமைப்பை பெற்றது. அந்த உலகக் கிண்ணத்தை லண்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது. இதற்காக 2 மாத காலம் எடுத்துக் கொண்டது. உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரமும், 11 கிலோ எடையும் கொண்டது. வெள்ளியால் செய்யப்பட்ட இந்த எலகக் கிண்ணம் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்.
கிரிக்கெட்டின் அடிப்படை தத்துவமான பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் மூன்று பில்லர்கள் கிண்ணத்தை தாங்கிப்பிடிக்கின்றன.
பில்லர்களின் மேலே உள்ள உருண்டை வடிவம் பந்தை குறிக்கும். ஒவ்வொரு பில்லரிலும் உள்ள மூன்று கம்பிகளும் மூன்று ஸ்டம்புகளை நினைவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு மாதிரி கிண்ணமே வழங்கப்படும். உண்மையான கிண்ணம் டுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைமையகத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கும். இவ்விரு உலகக் கிண்ணங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.
உண்மையான உலகக் கிண்ணத்தில் இதுவரை உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அக் கிண்ணத்தில் இன்னும் 9 அணிகளின் பெயரை பொறிப்பதற்கு இடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.