ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை சிப்பாய் பொதுபல சேனா ஊடாக தேர்தலில் போட்டி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித ரோஹன விஜேமுனி எதிர்வரும் ப...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித ரோஹன விஜேமுனி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்கும் அரசியல் கட்சியின் ஊடாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் திகதி இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்தார்.

அப்போது அவருக்கு கடற்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதை வழங்கும் கடற்படை அணியில் இருந்த விஜித ரோஹன விஜேமுனி ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கினர். அந்த தாக்குதலில் இருந்து ராஜீவ் காந்தி மயிரிழையில் தப்பினார்.

ராஜீவ் காந்தியை தாக்கிய விஜித ரோஹன விஜேமுனி தற்போது சோதிடராக செயற்பட்டு வருகிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மரண கண்டம் இருப்பதாகவும், அவர் இறப்பதை தவிர்க்க முடியாது எனவும் விஜிதமுனி சோதிட எதிர்வுகூறலை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பு, தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றில் அந்த அமைப்பை இணைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியில் விஜித ரோஹன விஜேமுனி போட்டியிட தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

தலைப்பு செய்தி 5165724617848941586

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item