வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றவில்லை: மஹிந்த கூறியது பொய்!

தற்போதைய அரசாங்கம் வடக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் நீக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ...

தற்போதைய அரசாங்கம் வடக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் நீக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் இடம்பெற்ற பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுப்பிய அறிக்கையில், தற்போதைய அரசாங்கம் வடக்கில் இருந்து 59 இராணுவ முகாம்களை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது ஜனாதிபதி, பிரதமர் அல்லது தற்போதைய அரசாங்கத்தால் அவ்வாறானதொரு செயல் செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தால் வடக்கிலுள்ள 59 இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டிருப்பின் அவை எவை என கூறுமாறு, கபீர் ஹாசீம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மறைக்கவே இந்த அரசாங்கத்தின் மீது முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குற்றம்சுமத்தியுள்ளார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 1247214214704697099

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item