பிரதமர் ஒருவர் நாட்டின் எப்பிரதேசத்திலிருந்தும் வரலாம்: ஜனாதிபதி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையையும் செய்யவில்லையெனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பிரதேசத்தில...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_223.html
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையையும் செய்யவில்லையெனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் பிரதமர் ஒருவர் வரலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தம்பதெனியவில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான அரசியல் மற்றும் சமூக மாற்றத்துக்காக உயிரைக் கொடுத்து உழைப்பதற்கு தான் தாயர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சமூக மாற்றமொன்றுக்காக உழைத்த எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க போன்றவர்களின் தியாகம் நாட்டிற்கு மீண்டும் தேவைப்படுகின்றது.
சமூக மாற்றங்களுக்காக உழைத்த உலக தலைவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தனர், சிலர் தமது உயிரையும் தியாகம் செய்தனர்.
இருந்த போதிலும், எந்தவொரு சவாலின் முன்னாலும் பின்வாங்காமல் சகல சமூக மற்றும் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு நாட்டுக்குத் தேவையான சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்தை நோக்கி தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.