இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள் உள்ளனர்!
இலங்கையில் சுமார் 107,000 சிறுவர் தொழிலாளிகள் இருப்பதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளி...
http://kandyskynews.blogspot.com/2015/06/107000.html
2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சிறுவர் தொழிலாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.
சிறுவர்களுக்கு உரிய கல்வி வழங்கப்பட வேண்டியது அவர்களின் உரிமையாகும்.
எனினும் பல சிறுவர்கள் இன்று தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று நட்டாஸா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், 18வயது வரை அவர்கள் பாடசாலை கல்வியை பெறவேண்டும்
இதற்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டால் இது சிறுவர் தொழிலாளிகளாக கருதப்படுவர் என்று நட்டாஸா குறிப்பி;ட்டுள்ளார்.