உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலியாட்டின் அதிரடியால் ந...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலியாட்டின் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து விளையாடியது. தென் ஆப்பிரிக்கா முதலில் திணறிவந்தது. தென் ஆப்பிரிக்கா 30.3-வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து விளையாடியது. டி வில்லியர்ஸ் 9 ரன்களுடனும், டுபிளிஸ்சிஸ் 50 ரன்களுடன் விளையாடினர். டிவில்லியர்ஸ் இறங்கியதும், விளையாட்டு விறுவிறுப்பை எட்டியது. பந்துவீச்சில் அச்சுறுத்திய நியூசிலாந்தை டிவில்லியர்ஸ் அதட்டினார்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியில் மழை குறுக்கிட்டது. தென் ஆப்பிரிக்கா 38 ஓவர் விளையாடி இருந்த நிலையில் மழைபெய்தது. மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் எடுத்து இருந்தது. மழை நியூசிலாந்து அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது. மழை நின்ற பின்னர் ஓவர்கள் 43 குறைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் அதிரடி காட்டினார். டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் இறுதி கட்டத்தில் அபாரம் காட்டியதால் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை எட்டியது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 43 ஓவர்களுக்கு 298 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு மெக்கல்லம் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மெக்கல்லம் 26 பந்துகளில், 59 ரன்கள்(8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் கப்திலும் அபாரம் காட்டினார். 34 ரன்களில் கப்தில் அவுட் ஆனார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா கை வெகுவாக ஓங்கியது. நியூசிலாந்தின் ஆதிக்கத்தை தடுக்கும் விதமாக 4 விக்கெட்களை கைப்பற்றியது. ஆனால் எலியாட்டின் விக்கெட்டை மட்டும் எடுக்க தென் ஆப்பிரிக்கா தவறிவிட்டது. நல்ல வாய்ப்புகளையும் தென் ஆப்பிரிக்கா நழுவவிட்டது. எலியாட் கடைசி வரையில் அதிரடியாக ஆடி 84 ரன்கள் குவித்தார். இறுதியில் நியூசிலாந்து 42.5 ஓவர்களிலே 299 ரன்கள் எடுத்து, தென் ஆப்பிரிக்காவின் இலக்கை தகர்த்தது. நியூசிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரு அணிகளும் சமபலத்துடன் இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு களைகட்டியது. கடைசியில் 2 ஓவர்களுக்கு 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு இருந்த நம்பிக்கையை, தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடிய எலியாட் தகர்த்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்து நியூசிலாந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க செய்தார். தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடையே இரண்டு ஒற்றுமை இருந்து வருகிறது. இரு அணிகளுமே கோப்பையை வென்றது கிடையாது. அத்துடன் இரு அணிகளுக்கும் இதுவரை இறுதிப்போட்டி எட்டாக் கனியாகவே இருந்துவந்தது. தற்போது நியூசிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்காவிற்கு தான் சோகம் தொடருகிறது. இந்த முறையும் தோல்வி அடைந்து வெளியேறியது.

நியூசிலாந்து அணி 7-வது முறையாக அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 1975, 1979, 1992, 1999, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதியுடன் நியூசிலாந்து அணியின் கோப்பை கனவு கலைந்து இருக்கிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 4-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தது. 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. இந்த முறையும் தோல்வியையே தழுவியது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அழுந்துவிட்டனர். நியூசிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியிலும், தென் ஆப்பிரிக்கா வீரர்கள், ரசிகர்கள் மீண்டும் சோகத்துடனும் அழுதுவிட்டனர்.

Related

வதந்திகளால் கடுப்பான சச்சின்

சச்சினின் மகள் சாரா திரைப்படங்களில் சடிக்கவுள்ளார் எனும் செய்தி கடந்த காலங்களில் வௌியாகின. இது தொடர்பில் சச்சின் கடுப்பாகி தனது ட்விட்டர் தளத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார். இதில் இவர் தெரிவித்துள்...

டோனி இடத்திற்கு தகுதியானவர் யார்? சொல்கிறார் கோஹ்லி

டெஸ்ட் போட்டியில் டோனியின் விக்கெட் கீப்பிங் பணியை யாரிடம் கொடுக்கலாம் என்பது பற்றி டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி அவுஸ்திரேல...

சச்சினுக்கு இன்றைய தினம் பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இன்று (24) தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது வாழ்க்கையின் பாதிக் காலத்தை கிரிக்கெட்டிலேயே கழித்த பெருமை சச்சினுக்கு உண்ட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item