இலங்கையை வந்தடைந்தார் கட்டார் மன்னர்: மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து
கட்டார் மன்னர் அமீர் ஷெய்க் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இலங்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_354.html
கட்டார் மன்னர் அமீர் ஷெய்க் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இலங்கை வந்தடைந்த இவர் சுமார் மூன்று மணித்தியாலங்களே இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் செய்தி பரிமாற்றம் போன்ற மூன்று ஒப்பந்தங்களில் இவர் கைச்சாத்திடவுள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் சில மணித்தியாலங்களில் கட்டார் அமீர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் அவரும் அவரது பிரதிநிதிகளும் அரசாங்க தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களிலும் பங்குபற்றவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate