எதிர்பார்த்தவை நடக்காது போனால் தாம் உட்பட்ட ஒவ்வொருவரும் அரசாங்கத்தில் இருந்து விலக தாமதிக்க மாட்டார்கள் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹ...
எதிர்பார்த்தவை நடக்காது போனால் தாம் உட்பட்ட ஒவ்வொருவரும் அரசாங்கத்தில் இருந்து விலக தாமதிக்க மாட்டார்கள் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தாம் உட்பட்ட சில பெண்களே உயிராபத்துக்கு மத்தியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மைத்திரிபால தோல்வியடைய வேண்டும் என்பதற்காக பிரசாரம் செய்த பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் பலர் இப்போது சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை மீண்டும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சராக நியமித்தமையை ஹிருனிக்கா கண்டித்துள்ளார்.
தம்மை பொறுத்தவரை பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்