தெற்கு பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது
தெற்கு பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது என்று ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. பார்சிலோனாவில...

பார்சிலோனாவில் இருந்து, டுச்செல்டோர்ப் நோக்கி சென்ற விமானம் தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏர்-பஸ் ரக விமானமானது லுப்தான்சாவுக்கு சொந்தமானது என்றும் விமானத்தில் 142 பயணிகள், 2 பைலட்கள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியாவில்லை.