பக்தாதி உள்பட 24 ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்ல முடிவு: அமெரிக்க சிறப்புப்படை தயாராகிறது
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனிநாடு அமைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர். தற்போது அண்டை நாடுகளிலும் தாக்குதல் நடத்துகின்...
http://kandyskynews.blogspot.com/2015/02/24.html

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனிநாடு அமைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர். தற்போது அண்டை நாடுகளிலும் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர்.
எனவே, அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் களம் இறங்கியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீச்சு நடத்துகிறது.
ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஒடுக்க முதலில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை கொல்ல அமெரிக்கா சிறப்பு படை அமைத்துள்ளது. அது ஒரு பட்டியல் தயாரித்துள்ளது.
24 முக்கிய ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர்களை அழித்து விட்டால் இந்த அமைப்பின் தீவிரம் குறைந்து விடும் என அமெரிக்கா கருதுகிறது.
இவர்களில் முக்கியமானவர் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் அல்–பக்தாதி. அமெரிக்கா படையால் கொல்லப்பட்டு விடுவோம் என தெரிந்தே இவர் ரகசிய இடத்தில் பதுங்கியுள்ளார்.
எனவே, அவரது இருப்பிடம் தற்போது தெரிய வில்லை. அவர் இருக்கும் இடம் அறிய அமெரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிரவாக உள்ளனர். இதற்கிடையே இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த பல தீவிரவாதிகள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்கா பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. தற்போது எகிப்து, ஏமன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் லிபியாவிலும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் காலூன்ற தொடங்கியுள்ளது. அது அமெரிக்காவை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. எனவே, கொல்லப்படுபவர்களின் புதிய பட்டியல் தயாரிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


Sri Lanka Rupee Exchange Rate