பாடசாலை நண்பர்கள் இருவர் நீண்டகாலத்தின் பின்னர் நீதிபதியாகவும் திருடனாகவும் நீதிமன்றத்தில் சந்தித்தனர் (வீடியோ)
பாடசாலையில் நண்பர்களாக இருந்த இவர்கள் அமெரிக்காவின் மியாமி நகர நீதிமன்றம் ஒன்றில் பல வருடங்களின் பின்னர் ஒருவர் நீதிபதியாகவும் மற்றவர் திர...

பாடசாலையில் நண்பர்களாக இருந்த இவர்கள் அமெரிக்காவின் மியாமி நகர நீதிமன்றம் ஒன்றில் பல வருடங்களின் பின்னர் ஒருவர் நீதிபதியாகவும் மற்றவர் திருடனாக குற்றவாளிக்கூண்டில் முதன் முதலில் சந்தித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வழக்கு விசாரணை நடைபெற்றபோது திருடனாக இருந்த தனது முன்னாள் நண்பனை அடையாளம் கண்டுகொண்ட பெண் நீதிபதி தாங்கள் முன்னர் படித்த பாடசாலையின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு படிக்கச் சென்றீரா என்று கேட்டபோது , நீதிபதி தனது நண்பி என்பதை அறிந்து கொண்ட திருடன் உடைந்துபோய் பெரிதாக அழத்தொடங்கினான்.
அப்போது அந்த நீதிபதி ” உம்மை இந்த இடத்தில் காண்பதற்கு வருத்தம் அடைகிறேன். உமக்கு என்ன நடந்தது என்று நினைத்துப்பார்த்திருக்கிறேன் ” என்று கூறினார். அத்துடன், பாடசாலையிலே அவர் மிகச் சிறந்த ஒரு மாணவனாக இருந்ததாக குறிப்பிட்டு அவரைப்பற்றிய நல்ல விடயங்களை கூறினார். பின்னர், தனது நண்பனைப் பார்த்து , உமது பிழைகளைத் திருத்தி நல்ல முறையில் வாழ்வீர் என்று நம்புகிறேன் என்று கூறினார். திருடன் 43,000 டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.