நெருக்கடியான நிலைக்குள் கொழும்பு அரசியல்! தீர்வு காண்பது யார்?
சிறிலங்காவின் சமகால அரசியலில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதால், பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பொதுத் தேர்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானலும், இது குறித்து கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களிடம் மஹிந்தவுக்கான வேட்பு மனு வழங்கவில்லை என தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள எவருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வேட்பு மனு வழங்குவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது இறுதி முடிவை எதிர்வரும் 24 மணித்தியத்திற்குள் அறிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சார்பில் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதி மைத்திரியால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 33 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.